சிறுமியின் வயதை திருத்தி திருமணம்: தாய்-வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
கோவில்பட்டியில் சிறுமியின் வயதை திருத்தி திருமணம் செய்த விவகாரத்தில் தாய், வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்
கோவில்பட்டி:
நாமக்கல் மாவட்டம் அத்தனூர் விநாயகாபுரத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் சங்கர் (வயது 27). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 12 வயது சிறுமிக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்திற்காக சிறுமியின் வயதை ஆதார் அட்டையில் 19 வயது என முறைகேடாக திருத்தம் செய்து, அவரது தாயார், வாலிபர் சங்கருக்கு திருமணம் செய்து கொடுத்தாராம்.
இதுபற்றி அறிந்த தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பிரியா தேவி கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நாககுமாரி போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாய் மற்றும் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் சங்கர் ஆகியோரை கைது செய்தார். சிறுமி மீட்கப்பட்டு தூத்துக்குடியில் சிறுமிகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டாள்.
Related Tags :
Next Story