காண்டிராக்டரிடம் ரூ.95 ஆயிரம் பறிமுதல்


காண்டிராக்டரிடம் ரூ.95 ஆயிரம் பறிமுதல்
x
தினத்தந்தி 13 Feb 2022 8:37 PM IST (Updated: 13 Feb 2022 8:37 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் காண்டிராக்டரிடம் 95 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கோவில்பட்டி:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் அன்பளிப்பு கொடுப்பதை தடுப்பதற்காக கோவில்பட்டியில் 24 மணி நேரமும் பறக்கும் படையினர் சுழற்சி முறையில் வாகன சோதனை  நடத்தி வருகிறார்கள். நேற்று கோவில்பட்டி புதுகிராமத்தில் பறக்கும் படை தாசில்தார் ராஜ்குமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன், போலீஸ்காரர்கள் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது கோவில்பட்டியில் இருந்து வடக்கு இலுப்பையூரணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கட்டிட காண்டிராக்டர் குமார சுப்பிரமணியன் (வயது 50) என்பவரிடம் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் வைத்திருந்த ரூ.95,700-ஐ பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை நகரசபை தேர்தல் உதவியாளர் சக்திவேலிடம் ஒப்படைத்தனர். பணத்திற்கான ஆதாரங்களை கொடுத்து பெற்று கொள்ளலாம் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். கைப்பற்றப்பட்ட பணம் கோவில்பட்டி கிளை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Next Story