சரணாலயங்களில் 25 ஆயிரம் பறவைகள்


சரணாலயங்களில் 25 ஆயிரம் பறவைகள்
x
தினத்தந்தி 13 Feb 2022 4:01 PM GMT (Updated: 13 Feb 2022 4:01 PM GMT)

ராமநாதபுரம் மாவட்ட சரணாலயங்களில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில் இந்த ஆண்டு 25 ஆயிரம் பறவைகள் வந்துள்ளது கண்டறியப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்ட சரணாலயங்களில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில் இந்த ஆண்டு 25 ஆயிரம் பறவைகள் வந்துள்ளது கண்டறியப்பட்டு உள்ளது.
கணக்கெடுப்பு
ராமநாதபுரம் வனஉயிரினக்கோட்டம் சார்பில் தேர்த்தங்கால் பறவைகள் சரணாலயம், சித்திரங்குடி, காஞ்சிரங்குளம், சக்கரக் கோட்டை, கீழ செல்வனூர், மேல செல்வனூர் ஆகிய பறவைகள் சரணாலயங்களிலும் மற்றும் திருஉத்திர கோசமங்கை கண்மாய், பெரிய கண்மாய், மல்லல் கண்மாய், ஆர்.எஸ். மங்கலம் கண்மாய், மேல்மாந்தை கண்மாய் போன்ற சரணாலயங்களுக்கு வெளிப்பகுதி கண்மாய்களிலும் வனத்துறையின் சார்பில் 2-ம் கட்ட பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. 
கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இந்த கணக்கெடுப்பில் கோவை, மதுரை போன்ற பகுதிகளில் இருந்து 50 பறவைகள் ஆராய்ச்சியாளர்கள், பறவைகள் நிபுணர்கள் கலந்து கொண் டனர். ராமநாதபுரம் வனஉயிரின காப்பாளர் பகான் ஜகதீஷ் சுதாகர் ஆலோசணையின்படி உதவி வனப்பாதுகாவலர் கணேசலிங்கம், வனச்சரகர் ஜெபஸ் ஆகியோர் மேற்பார் வையில் இந்த கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்த முறை சரணாலய பகுதிகளை காட்டிலும் சரணால யத்திற்கு வெளியில் உள்ள நீர்நிலைகளில் அதிகம் தண்ணீர் இருந்ததால் அவற்றில் அதிக  அளவிலான பறவைகள் இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது.
குறிப்பாக சிக்கல் பகுதி கண்மாயில் சுமார் 241 பூ நாரை (பிளமிங்கோ) வகை பறவைகளும், திருஉத்தரகோசமங்கை, மல்லல் கண்மாய், ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயிலும் அதிக அளவிலான பறவைகள் காணப்பட்டது. மாவட்டத்தில் அதிக அளவிலான நீர்இருப்பு நீர்நிலைகளில் காணப்படுவதால் இந்த பறவைகள் 2 இனப்பெருக்க சுழற்சியும், இன்னும் சில பறவைகள் இந்த ஆண்டு 3 இனப்பெருக்க சுழற்சியும் மேற்கொள்ளும் வாய்ப்பு அதிகம் உள்ளது கண்டறியப் பட்டு உள்ளது. 
120 பறவை இனங்கள்
இது எந்த பகுதியிலும் காணப்படாத சிறப்பாக உள்ளது. இதற்கு கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக உள்ளது. இந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் சுமார் 120 பறவை இனங்கள் வந்துள்ளதும் அதில் அதிகஅளவாக நத்தை கொத்தி நாரை, கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை, நீர்க்காகங்கள் மற்றும் கொக்கு வகைகள் வந்துள்ளன. மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 2-ம் கட்ட கணக் கெடுப்பில் 25 ஆயிரம் பறவைகள் நீர்நிலைகளை தேடி வந்துள்ளது கண்டறியப்பட்டு உள்ளது.

Next Story