சுற்றுலா வாகனங்கள் செல்ல விதிக்கப்பட்ட தடையால் கடும் போக்குவரத்து நெருக்கடி
தனுஷ்கோடி அரிச்சல்முனை வரும் சுற்றுலா வாகனங்களை சாலை வளைவில் திருப்புவதற்கு அனுமதிக்கப்படாததால் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சுற்றுலா வாகனங்கள் சிக்கின.
ராமேசுவரம்,
தனுஷ்கோடி அரிச்சல்முனை வரும் சுற்றுலா வாகனங்களை சாலை வளைவில் திருப்புவதற்கு அனுமதிக்கப்படாததால் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சுற்றுலா வாகனங்கள் சிக்கின.
கட்டுப்பாடு
கொரோனா கட்டுப்பாடு காரணமாக ராமேசுவரம் கோவிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பக்தர்கள் கூட்டம் அதிகம் இல்லாமல் அக்னி தீர்த்த கடற்கரை, ரதவீதி சாலை உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டு வந்தன.
தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலை மற்றும் கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடியது.
இந்த நிலையில் கட்டுப்பாடு தளர்வை தொடர்ந்து ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட மற்றும் கோவிலில் சாமியை தரிசனம் செய்யவும் 10 நாட்களுக்கு பிறகு நேற்று பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. கோவிலில் சாமி தரிசனம் செய்ய சுவாமி மற்றும் அம்பாள் சன்னதி பிரகாரங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
கடும் நெருக்கடி
புயலால் அழிந்துபோன தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலை மற்றும் கடற்கரை பகுதியிலும் மண்ணோடு மண்ணாக காட்சி அளிக்கும் கட்டிடங்கள் உள்ள பகுதியிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. விடுமுறை நாளான நேற்று தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலை, வளைவுகள் அங்கு வரக்கூடிய வாகனங்கள் திரும்பிச்செல்ல வசதியாக அமைக் கப்பட்டு உள்ளது. ஆனால் போலீசார் அரிச்சல்முனை வரும் வாகனங்களை அந்த வளைவில் திரும்பி வருவதற்கு அனுமதிக்காமல் முன்கூட்டியே தடுப்பு கம்பிகளை அமைத்து சாலையின் குறுக்கே பாதையை மறித்து தடுப்பு கம்பிகள் வைத்துள்ளதால் அங்கு வரக்கூடிய வாகனங்கள் நிறுத்த முடியாமலும் திரும்பி செல்ல முடியாமலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகின்றது.
கோரிக்கை
எனவே தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை வரும் வாகனங்கள் சாலை வளைவு வரை வந்து திரும்பி சென்று சாலை ஓரத்தில் வரிசையாக நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை காவல்துறை செய்யும் பட்சத்தில் அரிச்சல்முனை சாலை பகுதியில் போக்குவரத்து நெருக்கடி முழுமையாக இருக்காது. எனவே அதற்கான ஏற்பாடுகளை காவல்துறை செய்ய வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகள் வாகன ஓட்டிகள் அனைவரின் விருப்பம் மற்றும் கோரிக்கையாகும்.
Related Tags :
Next Story