தஞ்சையில் ரோஜா பூக்கள் விலை கடும் உயர்வு


தஞ்சையில் ரோஜா பூக்கள் விலை கடும் உயர்வு
x
தினத்தந்தி 13 Feb 2022 10:21 PM IST (Updated: 13 Feb 2022 10:21 PM IST)
t-max-icont-min-icon

இன்று காதலர் தினம் கொண்டாடப்படுவதை யொட்டி தஞ்சையில் நேற்று ரோஜா பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. ஒரு பூ ரூ.25 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல கடைகளில் பரிசு பொருட்கள் விற்பனையும் சூடு பிடித்தது.

தஞ்சாவூர்:
இன்று காதலர் தினம் கொண்டாடப்படுவதை யொட்டி தஞ்சையில் நேற்று ரோஜா பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. ஒரு பூ ரூ.25 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல கடைகளில் பரிசு பொருட்கள் விற்பனையும் சூடு பிடித்தது.
காதலர் தினம்
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்தன்று காதலர்கள் தங்களது காதலிகளுக்கு ரோஜா பூ மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்விப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு காதலர் தினம் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தன்று விற்பனை செய்வதற்காக தஞ்சை மார்க்கெட்டுக்கு ஓசூரிலிருந்து ரோஜா பூக்கள் அதிகளவில் வரவழைக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு பூக்கள் விளைச்சல் குறைவாக உள்ளதால் வரத்து குறைவாக உள்ளது. இதனால் தஞ்சையில் நேற்று ரோஜா பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது
ஒரு பூ ரூ.25 க்கு விற்பனை
ஓசூரில் இருந்து வரும் ரோஜா பூக்கள் ஒரு கட்டில் 20 பூக்கள் இருக்கும். வழக்கமான நாட்களில் பூக்கள் ஒரு கட்டு ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஆனால் நேற்று ஒரு கட்டு ரூ.500 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு பூ ரூ.25 க்கு விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் பூக்களை வாங்கி சென்றனர்.
இதேபோல் தஞ்சையில் உள்ள பல்வேறு பரிசுப்பொருட்கள் கடைகளிலும் காதலர் தின வாழ்த்து அட்டைகள் பரிசுப் பொருட்கள் விற்பனையும் அதிக அளவில் நடைபெற்றது. பல கடைகளில் காதலர் தினத்தன்று பரிசுப் பொருட்கள் அதிக அளவில் வாங்கி வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ரூ.50 முதல் 1,000 ரூபாய் வரையிலான பரிசுப் பொருட்களை அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான காதலர்களும் பரிசுகளை வாங்கி சென்ற வண்ணம் இருந்தனர்.
பரிசுப் பொருட்கள்
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள ஒரு கடையிலும் ஏராளமான பரிசு பொருட்கள் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இங்கு ஏராளமான காதலர்கள் வந்து தங்களது காதலி மற்றும் காதலர்களுக்கு பிடித்த பரிசுப் பொருட்களை வாங்கி சென்றனர்.

Next Story