ஓலைச்சப்பரத்தில் சாமி வீதிஉலா
கும்பகோணத்தில் மாசிமக விழாவை முன்னிட்டு 6 சிவன் கோவில்கள் மற்றும் 3 பெருமாள் கோவில்கள் சார்பில் ஓலைச்சப்பரத்தில் சாமி வீதி உலா நடந்தது.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் மாசிமக விழாவை முன்னிட்டு 6 சிவன் கோவில்கள் மற்றும் 3 பெருமாள் கோவில்கள் சார்பில் ஓலைச்சப்பரத்தில் சாமி வீதி உலா நடந்தது.
மாசிமகம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள மகாமகம் தொடர்புடைய சைவ மற்றும் வைணவ கோவில்களில் ஆண்டுதோறும் மாசி மாதம், மாசி மகத் திருவிழா விமரிசையாக கொண்டப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மாசி மக திருவிழா கடந்த 8-ந் தேதி ஆதிகும்பேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவன் கோவில்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து நாள்தோறும் காலை, மாலை இரு வேளையும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்று வருகிறது.
ஓலைச்சப்பர வீதி உலா
மாசிமக திருவிழாவின் 5-ம் நாள் விழாவை முன்னிட்டு மகாமக தொடர்புடைய ஆதிகும்பேஸ்வரர் கோவில், வியாழ சோமேஸ்வரர் கோவில், அபிமுகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட 6 சிவன் கோவில்கள் சார்பில் ரிஷப வாகன வீதி உலா நடைபெற்றது.
இதேபோல் வைணவ கோவில்களான ராமசாமி கோவில், சக்கரபாணி சாமி கோவில் உள்ளிட்ட 3 பெருமாள் கோவில்கள் சார்பில் கருட வாகன ஓலைச்சப்பர வீதிஉலா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story