ராமநத்தம் அருகே வேன் கவிழ்ந்து 10 பேர் காயம் திருமண விழாவுக்கு சென்ற போது சம்பவம்
ராமநத்தம் அருகே திருமண விழாவுக்கு சென்றவா்களின் வேன் கவிழ்ந்து 10 பேர் காயமடைந்தனா்.
ராமநத்தம்,
காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 45). இவரது உறவினர் ஒருவரது திருமணம் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக குமார், தனது உறவினர்கள் 20 பேருடன் ஒரு வேனில் சென்னைக்கு நேற்று புறப்பட்டார். வேனை காரைக்குடியை சேர்ந்த முருகன் மகன் மனோகரன் (42) என்பவர் ஓட்டினார்.
அப்போதுதிருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே கல்லூர் என்கிற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென வேனின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது.
இதில் வேனில் பயணம் செய்தவர்களில் 10 பேர் லேசான காயமடைந்தனர். இவர்களில் 2 பேர் வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story