முச்சந்தி பாதாள காளியம்மன் கோவில் பால்குட விழா


முச்சந்தி பாதாள காளியம்மன் கோவில் பால்குட விழா
x
தினத்தந்தி 13 Feb 2022 10:42 PM IST (Updated: 13 Feb 2022 10:42 PM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் முச்சந்தி பாதாள காளியம்மன் கோவில் பால்குட விழா நடந்தது.

கும்பகோணம்:
கும்பகோணம் பழைய பஸ் நிலையம் அருகே நாகேஸ்வரன் கோவில் தெற்கு வீதியில் முச்சந்தி பாதாள காளியம்மன் கோவில் உள்ளது.  இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் காவடி உற்சவம் நடைபெறுவது வழக்கம். நேற்று கும்பகோணம் பகவத் படித்துறையில் இருந்து சக்திவேல் காவடி, பால்குடம், திருமஞ்சனம், அழகு காவடி, கூண்டு காவடி, உள்ளிட்ட இதர பரிவாரங்களுடன் முக்கிய தெருக்கள் வழியாக பாதாள காளி அம்மன் கோவிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பால்குடம் மற்றும் பல்வேறு காவடிகளை சுமந்து சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

Next Story