மூங்கில்துறைப்பட்டு அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல் வாலிபர் பலி

மூங்கில்துறைப்பட்டு அருகே  டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல் வாலிபர் பலி
x
தினத்தந்தி 13 Feb 2022 10:44 PM IST (Updated: 13 Feb 2022 10:44 PM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல் வாலிபர் பலி

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மணலூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யந்துரை மகன் அருள்(வயது 23). திருப்பூரில் கூலி வேலை செய்து வரும் இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் மேல் சிறுவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது அருள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story