கண்டாச்சிபுரம் அருகே செல்போன் டவரில் திருடிய 3 பேர் கைது


கண்டாச்சிபுரம் அருகே செல்போன் டவரில் திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 Feb 2022 10:48 PM IST (Updated: 13 Feb 2022 10:48 PM IST)
t-max-icont-min-icon

கண்டாச்சிபுரம் அருகே செல்போன் டவரில் திருடிய 3 பேர் கைது


திருக்கோவிலூர்

கண்டாச்சிபுரம் அருகே  ஒதியத்தூர் கிராமத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவரில் உள்ள ஒயரை 3 மர்ம நபர்கள் துண்டு துண்டாக வெட்டி திருடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு பராமரிப்பு பணிக்காக வந்த டெக்னீசியன் விழுப்புரத்தை சேர்ந்த தனக்கோடி மகன் சேகர்(வயது 57) என்பவர் இதனை பார்த்து பொதுமக்கள் உதவியுடன் 3 மர்ம நபர்களையும் கையும் களவுமாக பிடித்து கண்டாச்சிபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். 
விசாரணையில் அவர்கள் கண்டாச்சிபுரத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் பரத்(19) மற்றும் 14, 15 வயதுடைய 2 சிறுவர்கள் என்பதும், செல்போன் டவரில் ஒயரை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 20 துண்டு ஒயா், மொபட், 2 பிளேடுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Next Story