ஊட்டி ஏரியில் புள்ளி மூக்கு வாத்துகள் அதிகரிப்பு


ஊட்டி ஏரியில் புள்ளி மூக்கு வாத்துகள் அதிகரிப்பு
x
தினத்தந்தி 13 Feb 2022 10:51 PM IST (Updated: 13 Feb 2022 10:51 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் 21 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்து முடிந்தது. ஊட்டி ஏரியில் வாழும் புள்ளி மூக்கு வாத்துகள் எண்ணிக்கை 200-ஆக அதிகரித்து உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊட்டி

நீலகிரியில் 21 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்து முடிந்தது. ஊட்டி ஏரியில் வாழும் புள்ளி மூக்கு வாத்துகள் எண்ணிக்கை 200-ஆக அதிகரித்து உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

பறவைகள் கணக்கெடுப்பு

நீலகிரி மாவட்டத்தில் 60 சதவீதத்துக்கும் மேல் வனப்பகுதிகள் உள்ளன. வனத்துறை மூலம் பறவைகள் கணக்கெடுக்கும் பணி  மாலை தொடங்கியது. இந்த நிலையில் ஊட்டி தெற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட ஊட்டி ஏரியில் காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. 

நீலகிரி வனக்கோட்ட அதிகாரி சச்சின் தலைமையில் தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறையினர் துடுப்பு படகில் கரையோரம் சென்று பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். நீரில் வாழும் பறவைகள் கேமராவில் புகைப்படம் எடுத்தும், நேரில் பார்த்தும் பதிவு செய்யப்பட்டது.

21 நீர்நிலைகளில் நடந்தது

அதேபோல் குந்தா, ஊட்டி வடக்கு, பார்சன்ஸ்வேலி, பைக்காரா, நடுவட்டம், கோரகுந்தா, கோத்தகிரி, கட்டபெட்டு ஆகிய வனச்சரகங்களுக்கு உட்பட்ட நீர்நிலைகள், அணைகள், ஆறு பகுதிகள், மசினகுடி ஏரி என 21 நீர் நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.

 இதில் 32 தன்னார்வலர்கள் கலந்துகொண்டு பறவைகளை கணக்கெடுத்து பதிவு செய்தனர். இதுகுறித்து நீலகிரி வனக்கோட்ட அதிகாரி சச்சின் கூறும்போது, நீலகிரியில் முதல் முறையாக நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்து முடிந்தது என்றார். 

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- 
200-ஆக அதிகரிப்பு
 ஊட்டி ஏரியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த அளவே காணப்பட்ட புள்ளி மூக்கு வாத்துகள் எண்ணிக்கை தற்போது 200 ஆக அதிகரித்து உள்ளது. இது நல்ல வாழ்விடம், இனப்பெருக்க சூழ்நிலை உள்ளதை காட்டுகிறது. புள்ளி மூக்கு வாத்து, நாமக்கோழி, நாரை உள்ளிட்ட பறவைகள் காணப்பட்டது. 

நீர்நிலைகளில் கூடுகள் அமைத்து முட்டையிட்டு குஞ்சு பொரித்து வெளியே வருவதை பார்த்தோம். நீர்நிலைகள் பறவைகள் வாழ பொருத்தமான இடமாக உள்ளது. 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story