வாக்குகள் எண்ண வசதியாக 61 மேஜைகள்


வாக்குகள் எண்ண வசதியாக 61 மேஜைகள்
x
தினத்தந்தி 13 Feb 2022 10:51 PM IST (Updated: 13 Feb 2022 10:51 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நீலகிரியில் வாக்குகளை எண்ண வசதியாக 61 மேஜைகள் போடப்பட்டு தயார் செய்யப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

ஊட்டி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நீலகிரியில் வாக்குகளை எண்ண வசதியாக 61 மேஜைகள் போடப்பட்டு தயார் செய்யப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

வாக்கு எண்ணும் மையங்கள்

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி 406 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. வருகிற 19-ந் தேதி வாக்குப்பதிவு முடிந்த பின்னர் பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக 13 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. 

ஓவேலி பேரூராட்சி, கூடலூர் நகராட்சிகளுக்கு கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கீழ்குந்தா பேரூராட்சி, பிக்கட்டி பேரூராட்சிகளுக்கு மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையங்களாகவும், பிற இடங்களுக்கு தனித்தனியாகவும் மையங்கள் உள்ளது.

 ஊட்டி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறைகளின் ஜன்னல்கள் மரப்பலகை கொண்டு மூடப்பட்டது. 2 பாதுகாப்பு அறைகள் தயார் செய்யப்பட்டு, தரையில் வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்க எண்கள் குறிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-

61 மேஜைகள்

ஊட்டி நகராட்சியில் பதிவாகும் வாக்குகளை எண்ண 9 மேஜைகள், குன்னூர் நகராட்சியில் 10, கூடலூர் 4, நெல்லியாளம் 8, அதிகரட்டி பேரூராட்சியில் 3, பிக்கட்டி பேரூராட்சியில் 2, தேவர்சோலை 4, உலிக்கல் 2, ஜெகதளா 2, கேத்தி 4, கோத்தகிரி 4, கீழ்குந்தா 2, நடுவட்டம் 2, ஓவேலி 3, சோலூர் 2 என மொத்தம் 61 மேஜைகள் போடப்படுகிறது. 

இந்த மேஜைகள் தயார் நிலையில் உள்ளன. ஒரு மேஜையில் ஒரு வாக்கு எண்ணும் அலுவலர், உதவியாளர், மேற்பார்வையாளர் என 3 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்கு எண்ணும் பணி கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப் படுகிறது. 

ஊட்டி வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தலுக்கு பின் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வருவது, வாக்கு எண்ணுவது, முகவர்கள், அலுவலர்கள் வந்து செல்வது போன்றவற்றை கண்காணிக்க 29 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. 

அதேபோல் மற்ற வாக்கு எண்ணும் மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தயார் நிலையில் உள்ளது.  

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story