485 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது


485 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது
x
தினத்தந்தி 13 Feb 2022 10:54 PM IST (Updated: 13 Feb 2022 10:54 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் 485 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது என உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன் கூறினார்.

தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் 485 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது என உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன் கூறினார்.
ஆய்வு
தஞ்சை ஊராட்சி ஒன்றியம் நரசநாயகபுரம் ஊராட்சி வயலூர் கிராமம் மற்றும் பாபநாசம் தாலுகா சரபோஜிராஜபுரம் ஊராட்சி, கிழவழுத்தூர் கிராமம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களையும், பாபநாசம் தாலுகா சரபோஜிராஜபுரம் ஊராட்சி நெடுந்தெருவில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாய விலை அங்காடியையும் உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
485 கொள்முதல் நிலையங்கள்
பின்னர் உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 485 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நெல்லின் ஈரப்பதம் தன்மை 17 சதவீதத்திற்கும் குறைவாக கொள்முதல் செய்ய வேண்டும்.
அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் முட்டைகளை கிடங்கிற்கு பாதுகாப்பாக எடுத்து செல்ல வேண்டுமெனவும், சேமிப்பு நிலையத்தில் உள்ள அனைத்து நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டுமென்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோதுமை
மேலும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் நியாயவிலை அங்காடிகளில் குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) வைத்திருப்பவர்களுக்கு தேவையான அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்எண்ணெய், பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை எந்தவித குறையுமின்றி பொதுமக்களுக்கு விரைவாக விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, துணை மேலாளர் இளங்கோவன், மாவட்ட அலுவலர் கமலக்கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
----


Next Story