தென்கரை ஆலத்தூர் அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேக்கம்
தென்கரை ஆலத்தூர் அரசு கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் கூடுதலாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மெலட்டூர்:
தென்கரை ஆலத்தூர் அரசு கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் கூடுதலாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்மூட்டைகள் தேக்கம்
பாபநாசம், மெலட்டூர், திருக்கருகாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 11-ந்தேதி திடீரென மழை பெய்தது. இந்த மழையால் அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் அரசு கொள்முதல் நிலையங்களில் சம்பா பருவத்தில் அறுவடை செய்த நெல் மூட்டைகள் அதிக அளவில் தேக்கம் அடைந்துள்ளன.
கூடுதலாக கொள்முதல்
இதனால் விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்வதற்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே அரசு கொள்முதல் நிலையங்களில் தேக்கமின்றி கூடுதலாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
---
Related Tags :
Next Story