ஓசூர் வனக்கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்
ஓசூர் வனக்கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்
ஓசூர்:
ஓசூர் வனக்கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.
18 நீர்நிலைகள்
ஓசூர் வனக்கோட்டத்தில் காப்புக்காடுகளுக்கு வெளியில் உள்ள ஈர நில பகுதிகளான ராமநாயக்கன் ஏரி, பாரூர் ஏரி, கே.ஆர்.பி.அணை, கெலவரப்பள்ளி அணை, தளி ஏரி உள்ளிட்ட 18 நீர்நிலைகளில் நேற்று வன உயிரின காப்பாளர் கார்த்திகேயினி தலைமையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.
இதில் 40-க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள் வனப்பணியாளர்கள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பணியில் ஈடுபட்டனர்.
மஞ்சள் மூக்கு நாரை
இந்த பணியின் போது பிளாக் லிவிங் கைட், பர்பிள் ஹெரான் கைட், வைட் நேட்டு உட்பெக்கர், இந்தியன் கிரே ஹார்ன்பில், மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பறவை இனங்களை அடையாளம் கண்டு உரிய படிவத்தில் குறிப்பிடப்பட்டன.
Related Tags :
Next Story