நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 62 பேருக்கு கொரோனா-இதுவரை 65,823 பேர் குணமாகி வீடு திரும்பினர்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 65,823 பேர் குணமாகி வீடு திரும்பி இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்:
62 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 67 ஆயிரத்து 572 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் நாமக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரின் பெயர் பிற மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது.
இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 67 ஆயிரத்து 570 ஆக குறைந்தது. இதற்கிடையே நேற்று ஒரே நாளில் மேலும் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே இதுவரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 632 ஆக அதிகரித்து உள்ளது.
1,276 பேருக்கு சிகிச்சை
நேற்று 237 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 65 ஆயிரத்து 823 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 533 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 1,276 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களை தொற்றில் இருந்து மீட்கும் பணிகளில் டாக்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் படிப்படியாக கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தாலும், நோய் பரவலை தடுக்கும் வகையில் வெளியில் செல்லும் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story