கிரித்சோமையாவுக்கு மனநல சிகிச்சை அளிக்க வேண்டும் சிவசேனா கருத்து


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 13 Feb 2022 11:52 PM IST (Updated: 13 Feb 2022 11:52 PM IST)
t-max-icont-min-icon

கிரித்சோமையாவுக்கு மனநல சிகிச்சை அளிக்க வேண்டும் என சிவசேனா கூறியுள்ளது.

மும்பை, 
கிரித்சோமையாவுக்கு மனநல சிகிச்சை அளிக்க வேண்டும் என சிவசேனா கூறியுள்ளது.
மனநிலை சிகிச்சை
பா.ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா மாநில அரசுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். சமீபத்தில் அவர், புனேயில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.
இந்தநிலையில் கிரித்சோமையாவுக்கு மனநல சிகிச்சை அளிக்க வேண்டும் என சிவசேனா கூறியுள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் மனிஷா கயன்டே எம்.எல்.சி. கூறியதாவது:- 
பா.ஜனதாவின் தலைவர் கிரித்சோமையா புனே கொரோனா சிகிச்சை மையங்கள் குறித்து குற்றம்சாட்டி உள்ளார். அவர் புயலை உருவாக்க முயற்சி செய்கிறார். ஆனால் தலைகுப்பற விழுகிறார். ஊழல் மற்றும் வெளிப்படை தன்மை இல்லை என குற்றம்சாட்டுகிறார். ஆனால் கொரோனா காலத்தில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவின் பணியை சுப்ரீம் கோர்ட்டு மட்டும் இன்றி உலகமே பாராட்டியது. ஆனால் இந்த பா.ஜனதா தலைவருக்கு வயிற்று எரிச்சல் ஏற்பட்டு இருக்கும் என தெரிகிறது. அவரது மனநிலை சீராக இல்லை. 
எனவே அவரை கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை கேட்டு கொள்கிறோம். அவருக்கு உடல் நல சிகிச்சை மட்டுமின்றி மனநல சிகிச்சையும் தேவைப்படுகிறது.
அரசு கவிழாது
கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் ஒப்பந்தம் டீ வியாபாரிக்கு கொடுக்கப்பட்டதாக கூறுகிறார். அது குறித்து விசாரிக்க வேண்டும் என்கிறார். நாட்டின் பிரதமரே டீ வியாபாரி தான். அதற்கு பா.ஜனதா எந்த எதிர்ப்பையும் கூறவில்லையே?. யாரும் கிரித்சோமையாவை கண்டு கொள்வதில்லை. 
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் சஞ்சய் ராவத் எம்.பி. கூறுகையில், "என் மீதான குற்றச்சாட்டுகளால் மகாவிகாஸ் அகாடி விழப்போவதில்லை. அடுக்கடுக்காக பொய் கூறி வரும் இந்த நபர் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார். நினைவில் வைத்து கொள்ளுங்கள் எங்கள் அரசு கவிழப்போவதுமில்லை. நான் உங்களுக்கு தலைவணங்க போவதுமில்லை." என்றார்.

Next Story