கீழச்சாலை-பெரியநாயகிகுளம் சாலை சீரமைக்கப்படுமா?


கீழச்சாலை-பெரியநாயகிகுளம் சாலை சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 13 Feb 2022 11:52 PM IST (Updated: 13 Feb 2022 11:52 PM IST)
t-max-icont-min-icon

குண்டும், குழியுமாக காணப்படும் கீழச்சாலை-பெரியநாயகிகுளம் சாலை சீரமைக்கப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

திருவெண்காடு:
குண்டும், குழியுமாக காணப்படும் கீழச்சாலை-பெரியநாயகிகுளம் சாலை சீரமைக்கப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
குண்டும், குழியுமாக காணப்படும் சாலை
சீர்காழி ஊராட்சி ஒன்றியம், கீழசட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழச்சாலையில் இருந்து பெரியநாயகிகுளம் வரை உள்ள சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையின் இடைப்பட்ட பகுதியில் நாராயணபுரம், முக்காவட்டம் கிராமங்கள் உள்ளன. 
மேற்கண்ட கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை தற்போது சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் கரடு, முரடாக காட்சி அளிக்கிறது. 
 விரைவில் சீரமைக்கப்படுமா?
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், சீழச்சாலை- பெரியநாயகிகுளம் சாலை, நாராயணபுரம், முக்காவட்டம், மேலச்சாலை உள்ளிட்ட கிராமங்களுக்கு இணைப்பு சாலையாக உள்ளது. இந்த சாலையின் வழியாக தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர். தற்போது இந்த சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையின் வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என்றனர்.
எனவே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் கீழச்சாலை - பெரியநாயகிகுளம் சாலை விரைவில் சீரமைக்கப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story