குடியாத்தத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கொடி அணிவகுப்பு
குடியாத்தத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.
குடியாத்தம்
குடியாத்தம் நகராட்சியில் வருகின்ற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் உத்தரவின்பேரில் போலீசார் துப்பாக்கி ஏந்தி கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.
குடியாத்தம் டவுன், தாலுகா, கே.வி.குப்பம் போலீசார், ஆயுதப்படை போலீசார் மற்றும் சிறப்பு காவல் படையினர் என 200-க்கும் மேற்பட்டோர் குடியாத்தம் சித்தூர்கேட், பிச்சனூர், புதிய பஸ்நிலையம், பழைய பஸ் நிலையம், சந்தப்பேட்டை பஜார், நேதாஜிசவுக், காந்தி சவுக் உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story