கொத்தடிமை தொழிலாளர்களை பாதுகாப்பதில் காவல்துறை முக்கியபங்கு வகிக்கிறது. வேலூர் சரக டி.ஐ.ஜி. பேச்சு
கொத்தடிமை தொழிலாளர்களை பாதுகாப்பதில் காவல்துறை முக்கிய பங்கு வகிப்பதாக வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா கூறினார்.
ஆற்காடு
கொத்தடிமை தொழிலாளர்களை பாதுகாப்பதில் காவல்துறை முக்கிய பங்கு வகிப்பதாக வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா கூறினார்.
முக்கிய பங்கு வகிக்கிறது
வேலூர் சரக காவல்துறை சார்பில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிப்பு மற்றும் விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்கள் முன்னேற்ற பாதுகாப்பான சமுதாய காவல் திட்டம் தொடக்க விழா ஆற்காடு வட்டம் காவனூர் அருகே உள்ள வெள்ளைகுளம் வரதேசி இருளர் காலனியில் நடைபெற்றது. வேலூர் சரக காவல்துறை மற்றும் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா தலைமை தாங்கி திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
அவர் பேசியதாவது:-
கொத்தடிமை தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை விடுவித்து மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்தி இன்று கொத்தடிமை தொழில் முறையை ஒழிப்பதில் தமிழ்நாடு சிறப்பாக விளங்குகிறது. கொத்தடிமை தொழிலாளர்களை பாதுகாப்பதில் காவல்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் அடிப்படையில் உதயம் காவல் திட்டம் கொத்தடிமை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மூலம் வேலூர் காவல்துறை சங்கத்தின் எல்லைக்குட்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்கள் வசிக்கின்றனர்.
நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்
அவர்களிடம் சமுதாய காவல் திட்டத்தின் சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் விடுவிக்கப்பட்ட கொத்தடிமை மக்களின் உடனடி தேவைகள் குறித்து ஆய்வு நடத்துதல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், நிதித்துறை அதிகாரிகளுடன் இணைந்து முகாம்கள் நடத்துதல், காவல்துறை- தொழிலாளர்கள் இடைவெளியை குறைத்து நம்பிக்கை ஏற்படுத்துதல் போன்ற பணிகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், வேலூர் சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story