வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம். 1,6732 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,6732 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். மின்னணு வாகக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணிதீவிரமாக நடக்கிறது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,6732 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். மின்னணு வாகக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணிதீவிரமாக நடக்கிறது.
சின்னம் பொருத்தும் பணி
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய 4 நகராட்சிகளுக்கும், ஆலங்காயம் உதேயந்திரம், நாட்டறம்பள்ளி ஆகிய 3 பேரூராட்சிகளுக்கும் வருகிற 19-ந் தேதி தேர்தல் நடக்கிறது. வாக்குபதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் வேகமாக நடந்து வருகிறது. தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நடந்து வருகிறது.
திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் வேட்பாளர்கள் முன்னிலையில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா மற்றும் பெல் நிறுவன பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
1,672 பேர்
திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள 75 வாக்குசாவடி மையங்களுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஆம்பூர் நகராட்சியில் 520 பேரும், வாணியம்பாடி நகராட்சியில் 416 பேரும், திருப்பத்தூர் நகராட்சியில் 360 பேரும், ஜோலார்பேட்டை நகராட்சியில் 144 பேரும் ஈடுபடுகின்றனர். அதேபோன்று ஆலங்காய பேரூராட்சியில் 88 பேரும், உதயேந்திரத்தில் 72 பேரும், நாட்டறம்பள்ளியில் 72 பேரும் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். நகராட்சி, பேரூராட்சிகளில் மொத்தம் 1,672 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
Related Tags :
Next Story