ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்த சென்னை வங்கி ஊழியர் மயங்கி விழுந்து சாவு


ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்த சென்னை வங்கி ஊழியர் மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 13 Feb 2022 11:58 PM IST (Updated: 13 Feb 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்த சென்னை வங்கி ஊழியர் மயங்கி விழுந்து இறந்தார்.

ஜோலார்பேட்டை

சென்னை புரசைவாக்கம் வேப்பேரி பகுதியை சேர்ந்த சம்பத் குமார் என்பவரின் மகன் ரகுவெங்கடேஷ் (வயது 31). இவர் சென்னையில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மோனிகா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

 இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வங்கிக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் ரகுவெங்கடேஷ் தனது நண்பர்கள் 15 பேருடன் சென்னையில் இருந்து ரெயில் மூலம் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்தார்.
நேற்று முன்தினம் பகலில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு இரவில் ‘போட் அவுஸ்’ சாலையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளனர்.

அப்போது நள்ளிரவில் ரகுவெங்கடேஷ் திடீரென மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆட்டோ மூலம் திருப்பத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ரகு வெங்கடேஷ் குடும்பத்தினருக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது. 
அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஏலகிரிமலை சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Next Story