வேலூர் மாநகராட்சி அ.தி.மு.க. வேட்பாளருக்கு பெண் குழந்தை பிறந்தது
வேலூர் மாநகராட்சி அ.தி.மு.க. வேட்பாளருக்கு பெண் குழந்தை பிறந்தது
வேலூர்
வேலூர் மாநகராட்சி 31-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர் காவ்யா (வயது 22). இவரது கணவர் தேவா. இவர்களுக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. வேட்பாளரான காவ்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோதிலும் தினமும் வார்டு முழுவதும் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வந்தார். வருகிற 20-ந் தேதிக்குள் குழந்தை பிறந்து விடும் என்று கூறப்பட்ட நிலையிலும் காலை, மாலை வேளைகளில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி மாலை காவ்யா சேண்பாக்கம் சந்தான ஈஸ்வரியம்மன் கோவில் தெருவில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது திடீரென பிரசவவலி ஏற்பட்டது. அதையடுத்து அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இரவில் அழகான பெண் குழந்தை பிறந்தது. வேட்பாளருக்கு குழந்தை பிறந்ததை அறிந்த அ.தி.மு.க.வினர் உள்பட பலரும் காவ்யாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story