ஜோலார்பேட்டை அருகே கரும்பு பாரம் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
கரும்பு பாரம் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் பகுதியில் இருந்து கரும்புகளை ஏற்றிக் கொண்டு நேற்று அதிகாலை 5 மணியளவில் லாரி ஒன்று நாட்டறம்பள்ளி அருகே கேத்தாண்டப்பட்டி பகுதியில் உள்ள திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சென்றது. திருப்பத்தூர் -வாணியம்பாடி சாலையில் ஜோலார்பேட்டை அருகே மேட்டுச்சக்கரகுப்பம் பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் மற்றும் கிளீனர் காயமின்றி உயிர் தப்பினர்.
லாரியில் இருந்த கரும்புகள் சாலையில் சரிந்து விழுந்தது. இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையில் கிடந்த கரும்புகளை அகற்றி. கவிழ்ந்த லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.
Related Tags :
Next Story