த.மு.மு.க. மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்


த.மு.மு.க. மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2022 12:07 AM IST (Updated: 14 Feb 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

ஹிஜாப் அணிய தடை விதித்த கர்நாடக அரசைக் கண்டித்து த.மு.மு.க. மகளிரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே நீடூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை பொருளாளர் பாத்திமா ஜொஹ்ரா தலைமை தாங்கினார். கிளை செயலாளர் பாத்திமா நாச்சியா முன்னிலை வகித்தார். இதில் கட்சியின் மாநில மகளிர் அணி பொருளாளர் ஷான்ராணி ஆலிமா கலந்து கொண்டு பேசினார். 
ஆர்ப்பாட்டத்தில், ஹிஜாப் அணிய பெண்களுக்கு அனுமதி மறுக்கும் கர்நாடக பா.ஜ.க. அரசை கண்டித்தும், இஸ்லாமிய பெண்களின் அடிப்படை உரிமையை மறுக்கும் மத்திய அரசு அதை கைவிட வேண்டும் என்றும், இந்திய அரசமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளை முழுமையாக வழங்க வேண்டும் என்றும், மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ஷேக் அலாவுதீன், மாவட்ட செயலாளர் பாசித் மற்றும் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

Next Story