கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரியில் விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை உற்சாகமாக பார்வையிட்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை உற்சாகமாக பார்வையிட்டனர்.
சுற்றுலா தலம்
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கம கடற்கரையில் குளித்து விட்டு, பகவதி அம்மனை தரிசனம் செய்வர். மேலும் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்த்து ரசித்துவிட்டு செல்வது வழக்கம்.
குவிந்தனர்
இந்தநிலையில் நேற்று ஞாயிறுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கன்னியாகுமரியில் காலை முதலே சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. காலையில் சூரிய உதயத்தை காண ஏராளமானோர் கடற்கரையில் குவிந்தனர். பின்னர் கடலில் நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுவதற்காக படகு போக்குவரத்து தொடங்குவதற்கு முன்பே சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். படகு போக்குவரத்து தொடங்கியவுடன் உற்சாக படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்த்து ரசித்து விட்டு சென்றனர்.
Related Tags :
Next Story