போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி


போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி
x
தினத்தந்தி 14 Feb 2022 12:38 AM IST (Updated: 14 Feb 2022 12:38 AM IST)
t-max-icont-min-icon

மானூர் அருகே போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி நடந்தது.

மானூர்:
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில், மானூரில் போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் கைப்பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் 13 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. நிகழ்ச்சிக்கு மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் முன்னிலை வகித்தார். தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் தலைமை தாங்கி, போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார். இதில் முதல் பரிசு கானார்பட்டி அணிக்கும், 2-வது பரிசு உக்கிரன்கோட்டை அணிக்கும், 3-ம் பரிசு மானூர் போலீஸ் அணிக்கும், மற்றவர்களுக்கு நினைவு பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி நன்றி கூறினார்.

Next Story