போலீசார் கொடி அணிவகுப்பு
பாளையங்கோட்டையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
நெல்லை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றியும், அமைதியான முறையிலும் வாக்களிப்பதை உறுதி செய்யும் பொருட்டு நெல்லை மாநகர போலீசார் சார்பில், கொடி அணிவகுப்பு பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் நடைபெற்றது. நெல்லை மாநகர கிழக்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில், கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் ஞானசேகரன், உதவி போலீஸ் கமிஷனர்கள் பாலச்சந்திரன் (பாளையங்கோட்டை), பாலமுருகன் (மேலப்பாளையம்) இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் என 150-க்கும் மேற்பட்டவர்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
இந்த அணிவகுப்பு பாளையங்கோட்டை மார்க்கெட்டில் தொடங்கி சீவலப்பேரி சாலை வழியாக சென்று தெற்கு பஜாரில் நிறைவுபெற்றது.
இதேபோல் மேலப்பாளையம் பகுதியில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பு மேலப்பாளையம் பஜாரில் இருந்து தொடங்கி குறிச்சி பகுதியில் நிறைவடைந்தது.
Related Tags :
Next Story