வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி மும்முரம்
களக்காடு நகராட்சி தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்றது.
களக்காடு:
களக்காடு நகராட்சி தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்றது.
நகராட்சி தேர்தல்
களக்காடு நகராட்சியில் உள்ள 27 வார்டு கவுன்சிலர் பதவிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. 27 வார்டுகளுக்கும் தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க., பா.ஜனதா, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் மற்றும் சுயேச்சைகள் உள்பட 129 பேர் போட்டியிடுகின்றனர்.
களக்காடு நகராட்சியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 156 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 12,579 பேரும், பெண் வாக்காளர்கள் 13,575 பேரும் உள்ளனர். மொத்தம் 30 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சின்னங்கள் பொருத்தும் பணி
இந்நிலையில் நேற்று களக்காடு நகராட்சி அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி மும்முரமாக நடந்தது.
வார்டு வாரியாக வேட்பாளர்கள் அழைக்கப்பட்டு, அவர்கள் முன்னிலையில் நகராட்சி ஆணையாளர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், மேற்பார்வையாளர்கள் சண்முகம், வேலு மற்றும் தேர்தல் அலுவலர்கள் எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னங்களை பொருத்தினர்.
Related Tags :
Next Story