சாப்டூர் வனப்பகுதியில் கஞ்சா சாகுபடி; ஒருவர் பிடிபட்டார்
சாப்டூர் வனப்பகுதியில் கஞ்சா சாகுபடி செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
பேரையூர்,
சாப்டூர் வனப்பகுதியில் கஞ்சா சாகுபடி செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா சாகுபடி
மதுரை மாவட்டம் சாப்டூர் வனப்பகுதியில் உள்ள 9-ம் நம்பர் பீட்டில் உள்ள 1,200 அடி உயரத்தில் சூரியஊத்து என்ற பகுதியில் கஞ்சா பயிர் சாகுபடி செய்துள்ளதாக சாப்டூர் வனத்துறையினர், மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு சாப்டூர் வனத்துறை அதிகாரி செல்லமணி, பாரஸ்டர் ஜெய்சங்கர், மற்றும் வனத்துறையினர், போலீசார் கொண்ட குழுவினர், சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு 15 குழிகளில் 10 நாள் பயிராக கஞ்சா செடிகள் தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தது தெரியவந்தது. உடனே வனத்துறையினர் கஞ்சா செடிகளை அழித்து குழிகளை மூடினார்கள். மேலும் அங்கிருந்த 4 பேரில் 3 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
ஒருவர் பிடிபட்டார்
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள செம்பட்டையான்கல் என்ற பகுதியை சேர்ந்த கருப்பசாமி (வயது 52) என்பவரை வனத்துறையினர் பிடித்து சாப்டூர் வனத்துறை அலுவலகம் கொண்டு வந்தனர். இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரை சாப்டூர் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story