விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி


விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி
x
தினத்தந்தி 14 Feb 2022 1:42 AM IST (Updated: 14 Feb 2022 1:42 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிபட்டி கிராமத்தில் டிரோன் மூலம் உரம் தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.

வாடிப்பட்டி,

மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் அரவிந்த், சந்திரகுப்தன், ஜெயப்பிரகாஷ், உலகசெல்வன், சண்முகம், லோகேஷ்வரன், செந்தில், கணேஷ், சக்திவேல் ஆகியோர் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் வாடிப்பட்டியில் தங்கி படித்து வருகின்றனர். ஆண்டிப்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு கிராமம் தோறும் டிரோன் என்ற திட்டத்தினை பற்றிய விழிப்புணர்வு அளிப்பதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.இந்த நிகழ்ச்சியின் மூலம் இத்திட்டத்தினை பற்றி தெரிந்து கொண்டதுடன், டிரோன் தொழில்நுட்பத்தைப் பற்றிய தங்களது கருத்துகளையும் விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர். மேலும் விவசாயிகளுக்கு டிரோன் தொழில் நுட்பத்தின் செயல்பாட்டினை செய்து காட்டி அதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளையும் விவரித்துக் கூறினர்.இத்தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி விவசாயிகள் ஒரு நாளைக்கு 30 முதல் 40 ஏக்கர் வரையிலான நிலத்திற்கு மருந்து தெளிக்கலாம், மேலும் பயிர் வளர்ச்சியையும் எளிதாக கண்காணிக்கலாம். இதனால் விவசாயிகளுக்கு வேலை நேரம் குறைவதோடு லாபகரமாகவும் உள்ளது என மாணவர்களால் விளக்கி கூறப்பட்டது. விவசாயி வெங்கிடுசாமி நிலத்தில் விவசாயிகளுக்கு செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.


Next Story