சர்க்கரை வள்ளிக்கிழங்கு விளைச்சல் அமோகம்; விலை வீழ்ச்சி
சர்க்கரை வள்ளிக்கிழங்கு விளைச்சல் அமோகமாக இருப்பினும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
காரியாபட்டி,
சர்க்கரை வள்ளிக்கிழங்கு விளைச்சல் அமோகமாக இருப்பினும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
அதிக மகசூல்
காரியாபட்டியின் அருகே உள்ள எம்.புதுப்பட்டி கிராமத்தில் வாழை, கடலை, மல்லிகைப்பூ, சர்க்கரை வள்ளி கிழங்கு, மிளகாய் ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது இந்த பகுதியில் சர்க்கரை வள்ளி கிழங்கு மகசூல் நன்றாக உள்ளது. ஆனால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதுகுறித்து விவசாயி சூசைநாதன் கூறியதாவது:-
காரியாபட்டி பகுதிகளில் சர்க்கரை வள்ளி கிழங்கு விளைச்சல் நன்றாக உள்ளது. தற்போது நன்கு விளைந்து கிழங்கு எடுக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
விவசாயிகள் கவலை
இந்த கிழங்கினை எடுக்கும்போது அதிக பூச்சி தாக்கியதில் ஏராளமான கிழங்குகள் கழிவு ஏற்படும் நிலைக்கு உருவானது. தற்போது சர்க்கரை கிழங்கு விளைச்சல் நன்றாக உள்ளது. ஆனால் நாங்கள் எதிர்பார்த்த விலை இல்லை.
ஒரு கிலோ சர்க்கரை வள்ளிக்கிழங்கு ரூ.14-க்கு மட்டுமே மதுரை காய்கறி மார்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கிழங்கு ரூ.30-க்கு விற்பனை செய்தால் தான் விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். ஆனால் தற்போது விலை குறைவாக விற்கப்படுவதால் நாங்கள் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளோம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story