அதிகாரியை மிரட்டியவர் கைது


அதிகாரியை மிரட்டியவர் கைது
x
தினத்தந்தி 14 Feb 2022 2:01 AM IST (Updated: 14 Feb 2022 2:01 AM IST)
t-max-icont-min-icon

அதிகாரியை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்

சோமரசம்பேட்டை
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே உள்ள மல்லியம்பத்து கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50). இவர் மணப்பாறை தாலுகாவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரை தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தான் தலைமை செயலகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி என மிரட்டி காரியம் சாதிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
 இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் ரமேஷ் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ரமேசை மிரட்டியவர் சுபாஷ் என்பதும், ஐ.ஏ.எஸ். படிக்காமல் அவரை மிரட்டியதும், அவர் இதுபோல பல்வேறு இடங்களில் நடந்து கொண்டதும் தெரிய வந்தது. அதன்பேரில் அவர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக மேலும் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story