மக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஈரோட்டில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஈரோட்டில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.
ஈரோடு
பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஈரோட்டில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகளில் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி மாவட்டம் முழுவதும் தேர்தல் வாக்குப்பதிவுக்காக 401 இடங்களில் 1,221 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 184 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
கொடி அணிவகுப்பு ஊர்வலம்
இந்தநிலையில் பொதுமக்கள் தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி வருகின்றனர். அதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக கொடி அணிவகுப்பு ஊர்வலம் நேற்று நடத்தப்பட்டது.
ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டனர். கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் இருந்து தொடங்கிய அணிவகுப்பு ஊர்வலம் காவிரி ரோடு, கே.என்.கே.ரோடு, மூலப்பட்டறை வழியாக சென்று பவானி ரோட்டில் நிறைவடைந்தது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்
Related Tags :
Next Story