தாளவாடி அருகே குட்டிகளுடன் ரோட்டை கடந்த யானைகள்- வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை


தாளவாடி அருகே குட்டிகளுடன் ரோட்டை கடந்த யானைகள்- வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 14 Feb 2022 2:18 AM IST (Updated: 14 Feb 2022 2:18 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே குட்டிகளுடன் யானைகள் ரோட்டை கடந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தாளவாடி
தாளவாடி அருகே குட்டிகளுடன் யானைகள் ரோட்டை கடந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குட்டிகளுடன் யானைகள்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் யானை, மான், சிறுத்தை, புலி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்கிருந்து வனவிலங்குகள் தண்ணீர், உணவு தேடி அடிக்கடி காட்டை விட்டு வெளியேறி ரோட்டை கடந்து செல்வது வழக்கம்.
அதன்படி தாளவாடி வனப்பகுதியில் இருந்து நேற்று பகல் 11 மணி அளவில் குட்டிகளுடன் யானைகள் வெளியேறின. பின்னர் தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் உள்ள சிக்கள்ளி அருகே யானைகள் குட்டிகளுடன் ரோட்டை கடந்து சென்றன.
வனத்துறையினர் எச்சரிக்கை
இதனால் அந்த வழியாக கார், பஸ், லாரி, இருசக்கர வாகனங்கள் என எந்த வாகனங்களும் செல்லவில்லை. யானையை பார்த்ததும் சற்று தூரத்திலேயே தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொண்டனர். ஒரு சிலர் தங்கள் செல்போனில் யானைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.
யானைகள் ரோட்டை கடந்ததும் வாகனங்கள் அங்கிருந்து சென்றன. இதனால் அந்த ரோட்டில் சுமார் 5 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘வனவிலங்குகள் உணவு, தண்ணீருக்காக அடிக்கடி சாலையை கடந்து செல்கிறது. எனவே வாகன ஓட்டிகள் வனவிலங்குகளை தொந்தரவு செய்யாமல் வனப்பகுதி சாலையில் செல்ல வேண்டும்’ என்றனர்.

Next Story