மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி
x
தினத்தந்தி 14 Feb 2022 2:19 AM IST (Updated: 14 Feb 2022 2:19 AM IST)
t-max-icont-min-icon

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது.

ஈரோடு
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளுக்கும், 4 நகராட்சிகளில் 102 வார்டுகளுக்கும், 42 பேரூராட்சிகளில் 630 வார்டுகளுக்கும் என மொத்தம் 792 வார்டுகளுக்கு அறிவிக்கப்பட்டது. 
வருகிற 19-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக 1,251 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மாநகராட்சியில் ஒருவர், பேரூராட்சிகளில் 20 பேர் என 21 பேர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். இதனால் 771 வார்டுகளுக்கான தேர்தல் 1,221 வாக்குச்சாவடிகளில் நடக்கிறது. இதற்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
மாதிரி வாக்குப்பதிவு
தேர்தல் நடைபெறும் நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. ஈரோடு மாநகராட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் ஆணைய இணையதளம் மூலமாக வாக்குப்பதிவு எந்திரங்களை எந்தெந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவது என்று சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. காமராஜர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நடந்த இந்த பணியை மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் பார்வையிட்டார். அப்போது அவர் வார்டு வாரியாக பிரித்து வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களில் அந்தந்த வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், சின்னம் சரியாக பொருத்தப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார்.
இந்த பணிகள் முடிவடைந்த பிறகு அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story