குருவி இனங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்வு
மாவட்டத்தில் பறவைகளின் வரத்து அதிகரித்து உள்ளது. அத்துடன் குருவி இனங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
மாவட்டத்தில் பறவைகளின் வரத்து அதிகரித்து உள்ளது. அத்துடன் குருவி இனங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்தது.
கணக்கெடுக்கும் பணி
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். பறவை ஆராய்ச்சியாளர்கள், ஆர்வலர்கள், மாணவர்கள் ஆகியோர் இந்த பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு எவ்வாறு பறவைகளை கணக்கெடுக்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப்குமார் ஆலோசனை வழங்கி கணக்கெடுக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.
தமிழகத்தில் தற்போது 632 பறவைகள் இனங்கள் உள்ளன. அதில் விருதுநகர் மாவட்டத்தில் 407 பறவை இனங்கள் உள்ளன. இந்த பறவையினங்கள் மூலம் விதை பரவுதல் அதிக அளவு நடைபெறுகிறது. மேலும் தற்போது கடந்த 2 ஆண்டுகளில் மழைபெய்து செழிப்பாக உள்ளதால் குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி இருப்பதாலும் பறவைகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
ஜோடி பறவை
குளங்களில் உள்ள மீன்களை பிடித்து உண்பதற்கும் இந்த மாவட்டத்திற்கு எண்ணற்ற வெளிநாட்டு பறவைகள் வருகின்றன.
கடந்த 2 நாட்களாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் பறவைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட உயர்ந்து உள்ளதாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அதேபோல ஜோடி பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
அதிகரிப்பு
கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட சந்தோஷ் என்பவர் கூறியதாவது:-
நாங்கள் ஒரு குழுவாக ராஜபாளையம் பகுதிகளில் முகாமிட்டு உள்ளூர் பறவைகள் கணக்கெடுப்பில் பணியில் ஈடுபட்டோம். பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வாழ்வாதாரம் இருப்பதால் இனப்பெருக்கமும் அடைந்துள்ளது. அழிந்து வரும் சிட்டுக்குருவி இப்பகுதியில் அதிக அளவு உள்ளன. மேலும் செவன் சிஸ்டர் என அழைக்கப்படும் குருவி இனமும் தற்போது அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story