அ.ம.மு.க. பெண் வேட்பாளர் அ.தி.மு.க.வில் இணைந்தார்


அ.ம.மு.க. பெண் வேட்பாளர் அ.தி.மு.க.வில் இணைந்தார்
x
தினத்தந்தி 14 Feb 2022 2:43 AM IST (Updated: 14 Feb 2022 2:43 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் நகராட்சி 12-வது வார்டு அ.ம.மு.க. பெண் வேட்பாளர் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் நகராட்சிக்கான தேர்தலில் 1, 6, 8, 10, 12, 18, 19 ஆகிய 7 வார்டுகளில் அ.ம.மு.க. சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். நகராட்சியின் 12-வது வார்டு பெண்கள் பொதுவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த வார்டில் தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க. மற்றும் 3 சுயேட்சைகள் என மொத்தம் 6 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் அ.ம.மு.க. சார்பில் பெரம்பலூர் சுப்பிரமணிய பாரதியார் தெருவை சேர்ந்த கோபிநாத்தின் மனைவி ரேவதி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். அவரும், அவரது கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அவர் கட்சியில் இருந்து திடீரென்று விலகி, மீண்டும் அ.தி.மு.க.வில் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன் முன்னிலையில் இணைந்தார். மேலும் அவர் 12-வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பரமேஸ்வரி கருப்பண்ணனுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story