வாக்குச்சாவடிக்கு தேவையான 80 பொருட்கள் தயார்
வாக்குச்சாவடிக்கு தேவையான 80 பொருட்கள் தயார்
உடுமலை நகராட்சி தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேவையான 80 பொருட்களை ஒன்று சேர்த்து பைகளில் வைத்து தயார் நிலையில் வைக்கும் பணிகள் நடந்தது.
நகராட்சி தேர்தல்
உடுமலை நகராட்சி தேர்தலில் மொத்தம் 63 வாக்குச்சாவடிகள்அமைக்கப்பட்டுள்ளன.
இதில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பல்வேறு படிவங்கள், வாக்காளர் பதிவேடு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டுஎந்திரம், வாக்காளர்களின் விரலில் வைப்பதற்கான அழியாத மை குப்பி, முத்திரைகள், பேனா, பென்சில், மெழுகுவர்த்தி, அரக்கு, பை, உறைகள் உள்ளிட்ட80 வகையான பொருட்கள் வழங்கப்படும்.
இந்த பொருட்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக வந்துள்ளன. இவற்றை ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேவையான 80பொருட்களையும் ஒன்று சேர்த்து, அவற்றை பைகளில் போட்டு தயார் நிலையில் வைக்கும் பணிகள் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இந்த பணிகளை உடுமலை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரான நகராட்சி ஆணையாளர் பி.சத்தியநாதன் அறிவுரைப்படி, நகராட்சி அலுவலர்கள் மேற்பார்வையில் பணியாளர்கள் மேற்கொண்டனர்.
வாக்குச் சாவடிக்கு அனுப்பி வைப்பு
இந்த பொருட்கள் வாக்குப்பதிவு நாளுக்கு முதல் நாள், உடுமலை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரான நகராட்சி ஆணையாளர், மண்டல அலுவலர் மூலமாக வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் ஒப்படைப்பார்.அந்த பொருட்களை, அந்தந்த வாக்குச்சாவடி தலைமை அலுவலர் வாங்கிவாக்குச்சாவடிக்கு கொண்டு செல்வார்.
Related Tags :
Next Story