ரசாயன தொழிற்சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
ரசாயன தொழிற்சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
சேவூர் அருகே விவசாய விளை நிலத்தில் ரசாயன தொழிற்சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ரசாயன தொழிற்சாலை
சேவூர் அருகே பொங்கலூர் ஊராட்சி பகுதியில் விவசாயம் பிரதானமாக உள்ளது. குறிப்பாக தொட்டிபாளையம் பகுதியில் விவசாயிகள் விளை நிலங்களை நம்பி உள்ளனர். மேலும் கால்நடை வளர்ப்பும் அவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. ஆண்டு முழுவதும் விவசாயம் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்பத்தை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், தொட்டிபாளையம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்ற ரசாயன தொழிற்சாலை அமைக்க ஆயத்த பணி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் ரசாயன தொழிற்சாலை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்பு
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது இப்பகுதியில் அதிகப்படியாக விவசாய விளை நிலத்தையும், கால்நடை வளர்ப்பையும் நம்பியுள்ளோம். இதற்கிடையில் இங்கு ரசாயன தொழிற்சாலை அமைக்கப்பட்டால், நிலத்தடி நீர் மாசுபட்டு, விளை நிலங்கள், கால்நடைகள் பாதிக்கப்படும். பொதுமக்களுக்கும் சுகாதாரக் கேடு ஏற்படும். ரசாயன தொழிற்சாலை அமைக்க கூடாது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் ஏற்கனவே புகார் தெரிவித்துள்ளோம். ஆகவே ஊராட்சி அனுமதி வழங்கக் கூடாது என்றனர்.
இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் விமலா செல்வராஜிடம் கேட்ட போது, தனியார் ரசாயன நிறுவனம் அமைப்பதற்கான கட்டுமானப்பணிக்கு அனுமதி கோரியிருந்தனர். இருப்பினும் விவசாயத்திற்கு எதிரானதால், அனுமதி வழங்கப்படவில்லை என்றார்.
Related Tags :
Next Story