வாக்காளர் விழிப்புணர்வு போட்டி
வாக்காளர் விழிப்புணர்வு போட்டி
ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார்.
வாக்காளர் விழிப்புணர்வு
இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் 'எனது வாக்கு எனது எதிர்காலம்-ஒரு வாக்கின் வலிமை' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு ஆன்லைன் மூலமாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகளை தொடங்கியுள்ளது. வினாடிவினா, வாசகம் எழுதும் போட்டி, பாட்டுப்போட்டி, காணொலிக்காட்சி உருவாக்கும் போட்டி மற்றும் போஸ்டர் வடிவமைப்பு போட்டி என 5 பிரிவுகளில் போட்டி நடைபெற உள்ளன.
நிறுவனம் சார்ந்த நபர்களுக்கான போட்டி வகையில் மத்திய, மாநில அரசின் கீழ் பதிவு பெற்ற பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வியியல் நிறுவனங்கள், அமைப்புகள் ஆகும்.
தொழில் சார்ந்த வகை என்பது காணொலிக்காட்சி உருவாக்குதல், விளம்பரம் படம் வடிவமைத்தல், பாடுதல் போன்ற ஏதேனும் ஒரு தொழிலை வாழ்வாதாரமாக கொண்டவர்கள் அல்லது அந்த தொழில்களில் பணிபுரிந்து முதன்மை வருவாய் ஈட்டக்கூடியவர்கள் தொழில் சார்ந்தவர்களுக்கான வகை என்று கருதப்படுகிறது.
தொழில் சாராதவர் வகை என்பது காணொலிக்காட்சி உருவாக்குதல், விளம்பரம் படம் வடிவமைத்தல், பாடுதல் ஆகியவற்றை ஒரு பொழுதுபோக்குக்காக மேற்கொண்டு ஆனால் தனது முதன்மை வருமானத்தை வேறு வழிகளில் இருந்து ஈட்டும் போட்டியாளர்கள் இந்த வகையை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
பரிசுகள் விவரம்
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பாட்டுப்போட்டியில் நிறுவனம் சார்ந்த வகையினருக்கு முதல் பரிசாக
ரூ.1 லட்சம், 2வது பரிசாக ரூ.50 ஆயிரம், 3வது பரிசாக ரூ.30 ஆயிரம், சிறப்பு பரிசாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். தொழில் சார்ந்த வகையினருக்கு ரூ.50 ஆயிரம், ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம் முறையே வழங்கப்படும். தொழில் சாராத வகையினருக்கு ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.7,500, ரூ.3 ஆயிரம் முறையே வழங்கப்படும்.
Related Tags :
Next Story