தொழிலாளியை அரிவாளால் வெட்ட முயற்சி


தொழிலாளியை அரிவாளால் வெட்ட முயற்சி
x
தினத்தந்தி 14 Feb 2022 7:30 PM IST (Updated: 14 Feb 2022 7:30 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்ட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்

கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள தோணுகால் கிராமம் மேல தெருவைச் சேர்ந்த செல்லையா மகன் ஆறுமுகம் (வயது 31). கூலித் தொழிலாளியான இவர் தனது நண்பர் பாண்டி என்பவருடன் கோவில்பட்டி மெயின்ரோட்டில் உள்ள ஓட்டல் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்துள்ளார். 
அப்போது அங்கு வந்த சாஸ்திரி நகரைச் சேர்ந்த வெள்ளத்துரை மகன் சின்ன ஜமீன் (வயது 28) என்பவர் சாலையோரமாக நிற்கச் சொல்லி, 2 பேரையும் அவதூறாக பேசினாராம். 
இதையடுத்து ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வாலிபர் அரிவாளால் ஆறுமுகத்தை வெட்ட முயன்றாராம். ஆறுமுகம் கூச்சலிடவே வாலிபர் கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றாராம். 
இந்த சம்பவம் குறித்து மேற்கு போலீசாரிடம் ஆறுமுகம் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் விரைந்து சென்று சின்னஜமீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story