காதலர் தினத்தையொட்டி சுற்றுலா தலங்களில் குவிந்த காதலர்கள்
காதலர் தினத்தையொட்டி நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களில் காதலர்கள் குவிந்தனர். அவர்கள் கேக் வெட்டி மகிழ்ந்தனர்.
ஊட்டி
காதலர் தினத்தையொட்டி நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களில் காதலர்கள் குவிந்தனர். அவர்கள் கேக் வெட்டி மகிழ்ந்தனர்.
காதலர் தினம்
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. காதலர் தினம் என்பதால் திருமணம் முடிந்தவர்கள் மற்றும் திருமணமாகாதவர்களும் இந்த தினத்தை கொண்டாடினார்கள்.
தமிழகம், கேரளா, கர்நாடகாவை சேர்ந்த காதலர்கள், காதலர் தினத்தன்று ஊட்டியில் சந்திப்பதை காதலின் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறார்கள். இதனால் ஊட்டியில் ஏராளமான காதலர்கள் குவிந்தனர்.
கேக் வெட்டி கொண்டாடினார்கள்
குறிப்பாக சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று காதலர் தினத்தை கொண்டாட காதலர்கள் அதிகம் பேர் வந்தனர்.
சிலர் அங்கு கேக் வெட்டி காதலர் தினத்தை கொண்டாடினார்கள். அப்போது காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களுக்கு பிடித்தமான பரிசு பொருட்களை வழங்கி மகிழ்ந்தனர்.
அத்துடன் சிலர் கேக் மற்றும் இனிப்புகளை ஊட்டியும் மகிழ்ச்சியுடன் காதலர் தினத்தை கொண்டாடி னார்கள். மேலும் அங்குள்ள பெரிய புல்வெளி மைதானத்தில் புகைப்படமும் எடுத்தனர்.
துண்டு பிரசுரங்கள்
அதேபோல் ஊட்டி ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் காதலர்கள் வருகை அதிகமாக இருந்தது. மேலும் புதிதாக திருமணமானவர்கள் ஊட்டிக்கு வந்து காதலர் தினத்தை கொண்டாடினர்.
இந்த நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காந்தல், பிங்கர்போஸ்ட் பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story