காபி விதை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
காபி விதைகள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கூடலூர்
காபி விதைகள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
காபி விதை விலை உயர்வு
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதியில் தேயிலை, காபி மற்றும் மலை பயிர்களும், கூடலூர் பகுதியில் தேயிலைக்கு இணையாக சமவெளியில் விளையக்கூடிய காய்கறிகள், நெல் விளைவிக்கப் படுகிறது. காபி பயிரில் ரொபஸ்டா, அரபிக்கா என 2 ரகங்கள் உள்ளது.
நீலகிரியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் காபி விளைகிறது. இதில் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் காபி அதிகளவில் பயிரிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் காபி விதைகள் அறுவடை சீசன் தொடங்கியதால் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளைந்த காபி விதைகளை பறிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
இதற்கிடையே காபி விதைகளுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறும்போது, பிரேசில் உள்பட வெளிநாடுகளில் காபி விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் இங்குள்ள காபி விதைகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டு இருப்பதால் கிலோ ரூ.85 வரை உயர்ந்து உள்ளது என்றனர். இதுகுறித்து கூடலூர் காபி வாரிய அலுவலர்கள் கூறும்போது, கூடலூர் பகுதியில் உள்ள ஓவேலியில் மட்டும் 3 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் அரபிக்கா ரக காபி விளைகிறது.
இந்த ரகம் கிலோ ரூ.400 வரை விலை கிடைக்கிறது. மிகவும் குளிர்ந்த காலநிலை என்றால் மட்டுமே அரபிக்கா ரகம் விளையும். ஆனால் மீதமுள்ள பகுதியில் ரொபஸ்டா ரகம் மட்டுமே பயிரிடப்படுகிறது என்றனர்.
Related Tags :
Next Story