கொடைக்கானல் பகுதியில் வானில் தெரிந்த செயற்கைகோள் வெளிச்சம்
கொடைக்கானல் பகுதியில் வானில் தெரிந்த செயற்கைகோள் வெளிச்சத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாகும். நேற்று அதிகாலை 5.45 மணி அளவில் ஆனந்தகிரி பகுதியை சேர்ந்த பாலா என்பவர் நண்பர்களுடன் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது 5.59 மணி அளவில் வானில் மிகப்பெரிய வெளிச்சத்துடன் ஒரு உருவம் மறைந்தது. இதை கண்டு அவர்கள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர். இது குறித்து பாலா தனது செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
இதுகுறித்து கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியிலுள்ள வானிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி எபினேசரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் சார்பில் பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட் இன்று (அதாவது நேற்று) அதிகாலை விண்ணில் ஏவப்பட்டது. இது கொடைக்கானலில் இருந்து வான்வெளி பகுதியில் சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட வெளிச்சமாகும். அதிகாலையில் தெளிவான வானிலை நிலவியதன் காரணமாக செயற்கைகோள் சென்றது கொடைக்கானல் பகுதியில் மிகவும் தெளிவாக தெரிந்து உள்ளது என்றார்.
இந்த அதிசய காட்சியை கொடைக்கானல் நகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்து உள்ளனர். இதன் காரணமாக கொடைக்கானலில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story