நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி
x
தினத்தந்தி 14 Feb 2022 10:09 PM IST (Updated: 14 Feb 2022 10:09 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சி தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

தர்மபுரி:
தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சி தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
 தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கு வருகிற 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் தலைமையில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஜெயசீலன், ஜெயவர்மன், கலைவாணி, மண்டல தேர்தல் அலுவலர்கள் ரேவதி, நடராஜன், பிரியா, ரமணசரண், மதுரகவி ஆகியோர் மேற்பார்வையில் இந்த பணி நடைபெற்றது.
எந்திரங்களுக்கு சீல்
நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்பட்டு அவர்களுக்கு அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் வேட்பாளர்களின் கையொப்பம் பெறப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதேபோன்று மாவட்டத்திலுள்ள பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய பேரூராட்சி அலுவலகங்களிலும் வேட்பாளர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது.
கலெக்டர் ஆய்வு
கம்பைநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்த பணியை கலெக்டர் திவ்யதர்சனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
இந்த ஆய்வின் போது பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகதீசன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமச்சந்திரன், பேரூராட்சி தேர்தல் பார்வையாளர் உஷாராணி, தேர்தல் உதவியாளர்கள் ராஜ்குமார், பழனிசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story