சங்கராபுரம் பேரூராட்சியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி


சங்கராபுரம் பேரூராட்சியில்  வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி
x
தினத்தந்தி 14 Feb 2022 10:36 PM IST (Updated: 14 Feb 2022 10:36 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் பேரூராட்சியில் நடந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணியை மாவட்ட தேர்தல் பார்வையாளர் மெர்சி ரம்யா ஆய்வு செய்தார்


சங்கராபுரம்

24 பேர் போட்டி

சங்கராபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 4 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் 11 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அ.தி.மு.க வேட்பாளர்கள் 8 பேர், தி.மு.க வேட்பாளர் 8 பேர், காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தலா ஒரு வேட்பாளர், பா.ம.க, அ.ம.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க. மற்றும் சுயேச்சை உள்பட 24 பேர் களத்தில் உள்ளனர். 
தேர்தலுக்காக 11 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 9 ஆயிரத்து 853 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 11 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கூடுதலாக 3 எந்திரங்கள் என மொத்தம் 14 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தேர்தல் பார்வையாளர் ஆய்வு

இந்நிலையில் அனைத்து கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த பணியில் தேர்தல் மண்டல அலுவலர்கள் கோவிந்தசாமி, மதியழகன் மற்றும் பெல் நிறுவனத்தின் பொறியாளர்கள் ஈடுபட்டனர். இதை மாவட்ட தேர்தல் பார்வையாளர் மெர்சி ரம்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
அப்போது தேர்தல் நடத்தும் அலுவலரும், பேரூராட்சி செயல் அலுவலருமான சம்பத்குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முகமத்கவுஸ், இளையராஜா, பேரூராட்சி தேர்தல் உதவியாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story