சிவகங்கை மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கின
சிவகங்கை மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கின. மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் கல்லூரிக்கு வந்தனர்.
சிவகங்கை,
சிவகங்கை மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கின. மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் கல்லூரிக்கு வந்தனர்.
வகுப்புகள் தொடக்கம்
தமிழகம் முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கின. இதில் சிவகங்கையில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு முதலாம் ஆண்டில் 100 மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த கல்லூரியில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான இட ஒதுக்கீட்டில் 6 பேரும் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் ஒருவரும் நேற்று மற்றும் கலந்தாய்வு மூலமாக 46 மாணவ மாணவிகளும் புதிதாக சேர்ந்தனர்.
உற்சாகமாக கல்லூரிக்கு வந்த மாணவர்கள்
இந்த நிலையில் நேற்று முதல் வகுப்புகள் தொடங்கியதால் புதிதாக மருத்துவப்படிப்பில் சேர்ந்த மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் சிவகங்கை மருத்துவ கல்லூரிக்கு வந்தனர். புதியதாக சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் தலைமையில் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாணவ-மாணவிகள் தங்களை அறிமுகப்படுத்தி ெகாண்டனர். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் (பொறுப்பு) சரவணன் மற்றும் துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story