கள்ளக்குறிச்சி அருகே குளத்தை தூர்வார கையேந்தும் போராட்டம்


கள்ளக்குறிச்சி அருகே  குளத்தை தூர்வார கையேந்தும் போராட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2022 10:48 PM IST (Updated: 14 Feb 2022 10:48 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே குளத்தை தூர்வார கையேந்தும் போராட்டம்


கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே பெருவங்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த குளம் உள்ளது. இந்த குளத்தில் உள்ள தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக குளத்தில் கழிவு நீர் கலப்பதால் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே கழிவுநீர் கலப்பதை தடுத்து குளத்தை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் பழமையான குளத்தை தூர்வாரக்கோரியும், ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் குளம் மீட்புக்குழு சார்பில் காத்திருப்பு மற்றும் கையேந்தும் போராட்டம் பெருவங்கூர் கிராமத்தில் நடைபெற்றது. தூர்வார நிதியில்லாத ஊராட்சி நிர்வாகத்துக்கு நிதி திரட்டும் வகையில் போராட்டக்குழுவினர் கையேந்தி நிதி சேகரித்தனர்.

Next Story