வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பு
தலைஞாயிறு பேரூராட்சியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
வாய்மேடு, பிப்.15-
தலைஞாயிறு பேரூராட்சியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தப்பட்டு பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரம் உள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தலைஞாயிறு பேரூராட்சியில்உள்ள 15 வார்டுகளில் பயன்படுத்தும் 15 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தபட்டுள்ளது.
58 வேட்பாளர்கள்
தலைஞாயிறு பேரூராட்சியில் அ.தி.மு.க., தி.மு.க., நாம்தமிழர் கட்சி், பா.ம.க., கம்யூனிஸ்டு கட்சியினர் உள்பட 58 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு வாக்குப்பதிவு மையத்துக்கு ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. பேருராட்சியில் தேர்தலில் ஈடுபடும் ஊழியர்கள் தபால் ஓட்டுகளை செலுத்த ஓட்டு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பேரூராட்சி செயல் அலுவலர் குகன் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story